அம்மா நல்லா ஆரோக்கியமாக இருந்தால்தானே பிள்ளையும் நல்லா இருக்க முடியும்!
சினிமா நொடிச்சுப்போய் நொம்பலத்தில் இருக்கிறது .ஊரடங்கு ஒடுங்கிய பிறகு எந்தெந்த படங்களை திரையிடுவது என்பதில் ஒரு கவுரவ -பாண்டிய யுத்தமே நடக்கும் என எதிர்பார்க்கிறார்கள் .
மாஸ்டர் படத்துக்கு முன்னுரிமை கிடைப்பதற்கு தயாரிப்பு நிறுவனம் கடுமையாக இருக்கும். ஊரடங்கு நடைமுறையில் இருந்த 21 நாட்களில் வெளியாகி இருக்கவேண்டிய படங்களுக்கு நியாயமான தியேட்டர்கள் ,சரியான தேதிகள்கொடுத்தாக வேண்டும்.தமிழக அரசு தலையிடாது என்பதற்கு உத்திரவாதம் இல்லை..பெரிய படங்களின் கதை இப்படி இருக்கிறது.
சின்னத்திரை நிலைமை என்ன?
சீரியல்களின் தொடரை அவ்வப்போது கொடுத்தாக வேண்டும் .
ஊரடங்கு அமலில் இருந்ததால் படப்பிடிப்புகள் நடக்கவில்லை.சீரியல்களின் தொடரை கொடுக்க முடியவில்லை. இதனால் எல்லா டிவி களுமே தொடரை அப்படி அப்படியே நிறுத்திவிட்டு பழைய தொடர்களை தூசு தட்டுகிறார்கள் .சன் டி.வி.யில் ஒளிபரப்பாகிய ரன் தொடரை இடையிலேயே நிறுத்தி விட்டார்கள் .
சித்தி 2 தொடர் வருகிற 5 ஆம் தேதிவரைதான் கேசட் இருக்கிறது .அதன் பிறகு வேறு தொடர்தான்.அதாவது பழைய சித்தி தொடரை ஒளிபரப்புவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
தற்போதைய சூழலில் சின்னத்திரை டெக்னீஷியன்கள் ,தினக்கூலிகள் வேலை வாய்ப்பின்றி இருக்கிறார்கள் .நெருக்கடியான பணத் தட்டுப்பாடு நிலவுகிறது.எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.