இயக்குநர் சீனு ராமசாமி. வித்தகர் பாலு மகேந்திராவின் சீடர்..வெற்றிப்படங்களை கொடுத்தவர் .தேசிய விருது பெற்றவர். இவர் கொரானா நோய் எதிர்ப்பு பாடலை எழுதி இருக்கிறார்.இசை என்.ஆர்.ரகுநந்தன் .
இசை.என்.ஆர். ரகுநந்தன்
பாடல்; சீனு ராமசாமி
பல்லவி
உன்னைக் காக்கும்
நேரமிது
உன் உயிரை காக்கும்
நேரமிது
உன் உறவை காக்கும்
நேரமிது
உன் நாட்டை காக்கும்
நேரமிது
தனித்திருப்பவன் மனிதன்
பிறரை காக்க நினைக்கிற
புனிதன்
கோரஸ்:
வெளியே போகாதே
உயிரை போக்காதே
தனியே இருப்பாயே
தலைமுறை காப்பாயே
சரணம்;
முத்தம் வேண்டாம்
பறக்கும் முத்தமிடுவோம்
கை குலுக்க வேண்டாம்
கையசைத்தால் போதும்
கட்டியணைக்க
வேண்டாம்
யாரையும் தொட்டு
பேச வேண்டாம்
உரையாடல் பருக
இரண்டு மீட்டர்
இடைவெளி தருக
சோப்பு நீரீலே
கை கழுவினால்
கொரானாவுக்கு
சமாதி கட்டலாம்
உயிர் கொல்லிக்கு
கொள்ளி வைக்கலாம்
உலகையே காக்கலாம்