வில்லனாக நடிப்பதில் அப்படி என்ன ஆர்வமோ .தெரியவில்லை. முன்னொரு காலத்தின் வில்லன் நடிகர் என்றால் நாயகியை வலுக்கட்டாயமாக அணைக்கும் விதத்தில் நடித்ததாக வேண்டிய நிலை இருந்தது. கிண்டலாக செய்தி கூட வரும் .
ஆனால் தற்காலத்தில் வில்லன் என்றால் கதாநாயகனுக்கு எதிர்நாயகன் என்கிற முக்கியத்துவம் இருக்கிறது.தகுந்த மரியாதை ,திறமைக்கு வேலை என வில்லனை செமயாக காட்டுகிறார்கள்.அதனால் தான் பிரசன்னாவுக்கு வில்லன் மீது ஒரு ஈர்ப்போ ?.
அஞ்சாதே படத்தில் இவரது வில்லன் கேரக்டருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.தொடர்ச்சியாக திருட்டு பயலே 2, மாஃபியா படங்களிலும் மிரட்டும் வில்லனாக நடித்து வருகிறார்.
அஜித்தின் வலிமை படத்தில் பிரசன்னாதான் வில்லன் என பேசப்பட்டது. ஆனால் வலிமை வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் வருத்தத்தோடு பதிவிட்டார்.
இப்பதிவை பார்த்த வெங்கட் பிரபுவின் தம்பியும் நடிகருமான பிரேம்ஜி, ‘வலிமை படத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் என்ன பிரசன்னா, மங்காத்தா 2 படத்தில் நீங்க கண்டிப்பா நடிக்கிறீங்க என ஆறுதல் அளிக்கும் விதத்தில் பதிவிட்டார்.
லாக் டவுன் நேரத்தில் நடிகர்,நடிகைகள் தங்களது சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், பிரசன்னாவும் அவ்வப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தனது டுவிட்டரில் பதில் அளித்து வருகிறார்.
அஜித்துடன் நடித்தால் என்ன கேரக்டரில் நடிப்பீர்கள் என்பது ஒரு கேள்வி.
அதற்கு “நிச்சயம் தல படத்தில் நடிப்பேன். நடித்தால் வில்லனாகத் தான் நடிப்பேன்” எனக் கூறியிருக்கிறார்
தளபதியுடன் படம் நடிக்க ஆசை இல்லையா? என்ற மற்றோரு ரசிகரின் கேள்விக்கு, “அந்த வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். நிச்சயம் அந்த ஆசையும் விரைவில் நடக்கும் என்று எதிர்பார்ப்பதாக “பிரசன்னா கூறியுள்ளார்.
மாஃபியா படத்தைத் தொடர்ந்து மாயா, கேம் ஓவர் படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாக உள்ள ஹாரர் த்ரில்லர் படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் பிரசன்னா.மேலும் படம் இயக்கும் ஆசை எதுவும் இருக்கிறதா? என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, இப்போதைக்கு அந்த ஆசை இல்லை என்றும் கூறியுள்ளார்..