ஊரே அடங்கிக் கிடக்கிறது.
வீட்டிலேயே இருங்கள் வெளியே வராதீர்கள் என கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
தொலைக்காட்சிகளிலும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள் .
ஆனால் எதையும் மதிக்காமல் திரைப்படத் தயாரிப்பாளர் ஷர்மிளா மன்றே என்கிற கன்னடத்து நடிகை நண்பருடன் இரவில் காரில் சுற்றி விபத்துக்குள்ளாகி இருக்கிறார்.
ஷர்மிளாவுக்கு தமிழில் மிரட்டல் படம்தான் அறிமுகம்.
முதல்படமே கோணலாகி விட்டதால் தயாரிப்பில் இறங்கினார்.
‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு ,’ ‘சண்டைக்காரி ‘ ‘நானும் சிங்கிள்தான்’ ஆகிய படங்களை தயாரித்தார். சொந்த மாநிலம் கர்நாடகா.
அரசிடம் கார் பாஸ் வாங்கிக்கொண்டு லோகேஷ் வசந்த் என்கிற பாய் பிரண்டுடன் ஜாகுவார் காரில் ஷர்மிளா புறப்பட்டிருக்கிறார்.
அதிகாலை 3மணி அளவில் கார் வசந்த நகர் பாலத்தின் கீழே தூணில் மோதி காரின் முன்பகுதி நொறுங்கிவிட்டது.
இருவருக்கும்நல்ல காயம். நடிகையின் முகம் கை ஆகிய இடங்களில் சரியான காயம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷர்மிளாவிடம் போலீசார் விசாரணை செய்த பொது தவறான விவரங்களை கொடுத்திருக்கிறார்.
ஜெயநகரில் விபத்து நடந்ததாக சொல்லியிருக்கிறார்.ஆனால் கிடந்தது வசந்த நகரில்.
சம்பவ இடத்துக்கு போலீசார் சென்றபோது காரின் அருகில் நின்றிருந்த ஒருவர் அந்த காரை டிரைவ் செய்தது அவர்தான் என்பதாக சொல்லியிருக்கிறார்.
“அப்படியா லைசன்ஸ் மற்ற தஸ்தாவேஜுகளை கொடு “என்று கேட்டதும் அந்த ஆள் உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார். காரை அவர் ஓட்டவில்லை !!தற்போது வழக்கு தீவிர விசாரணையில்.!
இவருக்கு எதற்காக கார் பாஸ் அந்த ராத்திரியில் வழங்கப்பட்டது ,என்ன காரணம் சொல்லியிருக்கிறார் என்பது உண்மையாக விசாரணை நடந்தால் தெரிந்து விடும்.