குளோபல் மீடியா வொர்க்ஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் புதிய படம்,“முத்துராமலிங்கம்”.15 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சு அருணாசலம் வரிகளில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில், கவுதம் கார்த்திக், கேத்ரின் தெரசா, பிரபு, சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா, சிங்கம்புலி, சிங்கமுத்து நடிக்கவுள்ளனர்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கவுள்ளார் ராஜதுரை. பஞ்சு அருணாசலத்துடன் சேர்ந்து இசைஞானி இளையராஜா 40 ஆண்டுகாலமாக திரையுலகில் பவனி வருகின்றனர். 1976, 1986, 1996, 2006 க்கு பிறகு 2016 ஆண்டில் மீண்டும் இணையும் திரைப்படம் கவுதம் கார்த்திக் நடிக்கும் முத்துராமலிங்கம். இப்படத்தின் மூலமாக மூன்று தலைமுறைகளுக்கு பாடல் எழுதிய பெருமையை பெறுகிறார் பஞ்சு அருணாசலம். இப்படத்தின் ஒளிப்பதிவை, யு கே..செந்தில்குமார் கவனிக்கிறார்.