இயக்குனர்,நடிகர் சேரனின் ’தவமாய் தவமிருந்து’ படம் குறித்து அவரது ரசிகர் ஒருவர், சமூக வலைத்தளத்தில், சேரனிடம் கேள்வி எழுப்பி இருந்தார். அக்கேள்விக்கு பதிலளித்துள்ள சேரன், ’தனது அடுத்த படம் தவமாய் தவமிருந்து போன்ற ஒரு திரைக்கதை கொண்ட படம் என்றும், அந்த படம் அண்ணன்- தங்கை குறித்த கதையம்சம் கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ள்ளவர்,தவமாய் தவமிருந்து போன்ற ஒரு படைப்பாகத்தான் விஜய்சேதுபதி யோடு இணையும் படத்துக்காக முடித்து வைத்திருக்கும் திரைக்கதை. ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது.. அண்ணன்களும், தங்கைகளும் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கப்போகும் படம். வழி விடுமா காலம்? என்றும் தனது பதிவில் கூறியுள்ளார்.