ஆந்திராவில் இருந்து விரட்டப்பட்டு சென்னையில் தஞ்சம் அடைந்திருப்பவர் ஸ்ரீ ரெட்டி என்கிற நடிகை. தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.
தெலுங்கில் இருக்கிற முக்கால் வாசி திரை உலக பிரபலங்கள் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டவர்கள் எனச்சொல்லி ஒரு பட்டியலை வெளியிட்டார்.
பின்னர் ராகவாலாரன்ஸ் ,.விஷால் ,ஏஆர் முருகதாஸ் ஆகியோரையும் விட்டு வைக்கவில்லை.அவர்களையும் சந்திக்கு இழுத்தார். லாரன்ஸ் மட்டும் நடிப்பதற்கு வாய்ப்புத் தருவதாக சொல்லியிருக்கிறார்.ஆனால் எப்போது நடக்கும் என்பது தெரியவில்லை.
தற்போது முருகதாஸை வம்புக்கு இழுத்திருக்கிறார்.கெட்ட வார்த்தையை பயன்படுத்தி வெளியிட்டு இருக்கிற அவரது பதிவினை பேஸ்புக் எப்படி வெளியிட்டது என்பது தெரியவில்லை.
“முருகதாஸ் அங்கிள்,பெண்களை திருடுவதைப்போல கதைகளையும் திருடுகிறீர். இவரெல்லாம் ‘லெஜண்ட் ?சாரி தமிழ்ச்சினிமா!” என பதிவு செய்திருக்கிறார்.
இவரெல்லாம் கவலைப்படுகிற அளவுக்கா தமிழ்ச்சினிமா இருக்கிறது?