தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வரும் படம் ‘நானும் ரௌடி தான்’ அனிருத் இந்தப்படத்திற்கு இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.இப்படத்தில் விஜய்சேதுபதி மிகவும் இளமையுடன் மாடர்ன் கெட்டப்பில் நடித்து வருகிறாராம்.
கடந்த சில நாட்களாக பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்த இந்தப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது என தனது டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்