தமிழ்ச்சினிமாவில் வெற்றிப்படங்களை கொடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கு மட்டும் நிலையான மார்க்கெட் இருக்கும்.
ஒரு படம் படுத்துவிட்டாலும் தயாரிப்பாளர்கள் பத்து அடி பின்வாங்கிவிடுவார்கள்.
“என்னண்ணே ,எங்கே விட்டிட்டிங்கன்னு பார்த்து பண்ணுங்கண்ணே “என்று பைசாவில் வெட்டு நடத்திவிடுவார்கள்.
முருகதாஸ் ,பாண்டிராஜ்,சமுத்திரக்கனி ,சீனுராமசாமி ஆகிய கதாசிரியர்கள் தமிழ்ப்பண்பாட்டின் மனம் குணம் கெடாமல் படம் எடுப்பவர்கள். அவர்களை தமிழ்ச்சினிமா விட்டுவிடாது. இந்த ஊரடங்கு காலத்தில் இவர்கள் எத்தனை கதைக்கான கரு முட்டைகளை அடை காத்தார்களோ தெரியாது.
இயக்குநர் பாண்டிராஜ் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்றுவிட்டார். தளபதி விஜய்க்காக தயார் பண்ணி வைத்திருக்கிற கதைக்கு மெருகேற்றிவருவதாக சொல்லப்படுகிறது. முழு ஸ்கிரிப்டும் தயாராகிவிட்டால் படப்பிடிப்புக்கு ஆயத்தமாகி விடலாம். பாண்டிராஜ் படம் என்றால் குடும்ப சூழல்களை சொல்கிற படமாக இருக்கும்.விஜய்க்கும் மாறுதலாக இருக்கும்.
ஆனால் தேவையான நடிக , நடிகையரின் கால்ஷீட் கிடைக்குமா? இதை விட முக்கியம் ஊரடங்கு ஜூன் மாதம் வரை போகும் என்று சொல்கிறார்களே.! அதுவும் விஜய் நடிக்கிறார் என்றால் எடப்பாடி அரசின் கருணைக்கண்களில் சிவப்பேறிவிடுமே!