உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தல்
மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்,
தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக் கிறது .இந்நிலையில் பிரதமர் மோடி டாக்டர்களுக்கு மற்றும் மருத்துவத்துறையினருக்கு நன்றி தெரிவிப்பதற்காக கை தட்ட சொன்னார். மக்கள் போகியே கொண்டாடிவிட்டார்கள். அடுத்து 9மணிக்கு மின்சார விளக்குகளை அணைத்து விட்டு 9நிமிடங்களுக்கு மெழுகுவர்த்தி அல்லது தீபம் ஏற்றுங்கள் என்று சொன்னார்.
. இதனையடுத்து பொதுமக்களும், பிரபலங்களும் விளக்குகளுடன் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர். சிலர் கூட்டம் கூட்டமாக கையில் எரிபந்தங்களுடன் ஊர்வலம் போனார்கள்.விட்டால் ஊரையே கொளுத்தியிருப்பார்கள்.
. சிலர் பட்டாசுகளை வெடித்தனர். இது போன்ற சில விஷயங்கள் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது.
இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது சமூக வலைதளத்தில், “இந்தியாவில் கொரோனா மட்டும் இல்ல, முட்டாள்தனமும் அழிக்கப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.