யோகிபாபுவுடன் ‘காக்டெய்ல்’ மற்றும் சி வி குமார் தயாரிப்பில்உருவாகி வரும் ‘வைரஸ்’ படங்களின் நாயகி ராஷ்மி கோபிநாத். லாக்டவுன் குறித்து கூறியுள்ளதாவது
“நான் எனது நேரத்தை வீட்டில் எப்படி செலவிடுகிறேன்தெரியுமா? என்னைப் பற்றி நிறைய அறிய இந்த நேரத்தை நான் பயன்படுத்துகிறேன்.
எனது உடல்நலத்தில் கவனம் செலுத்துகிறேன்.உடற்பயிற்சி செய்வதிலும், கேக் செய்வதிலும், சுத்தம் செய்வதிலும், இதற்கு முன்பு பார்க்க எனக்கு நேரமில்லாத நிறைய திரைப்படங்களைப் பார்ப்பது, படிப்பது, ஆன்லைனில் ஒரு சில நடிப்பு வகுப்புகளை எடுத்துக்கொள்வது மற்றும் நிறைய தூங்குவது என எனது நேரத்தை பயன்படுத்தி கொள்கிறேன்.மேலும், உங்க முகமூடியை நீங்களே உருவாக்கலாம்.
என் அம்மா எனக்கும் எனது குடும்பத்துக்கும் இந்த மூன்று அடுக்கு முகமூடியை வீட்டில் தயார் செய்தார்.
நீங்க இந்த முகமூடிகளை வீட்டிலேயே எளிதாக உருவாக்கலாம் அல்லது வெளியே செல்லும்போது உங்கள் முகத்தை மறைக்க தாவணி அல்லது கைக்குட்டை அணியலாம்.தயவுசெய்து சுகாதார நிபுணர்களுக்கான அறுவை சிகிச்சை முகமூடிகளை விட்டு விடுங்கள். ஏனென்றால் அவைகள் நம்மை விட அதிகமாக அவர்களுக்கு தேவைப்படும்.அவர்கள் தான் நமக்காக போராடிக்கொண்டு இருக்கும் உண்மையான ஹீரோக்கள்” என்கிறார்..