தனித்திரு பீரியடில் கேரட் அல்வா கிண்டி அசத்தியவர் நடிகை பூஜா ஹெக்டே.
இவர் பாலிவுட் நடிகர் ரோகன் மெஹ்ராவுடன் ஒன்றாக சுற்றுகிறார் என செய்திகள் வந்த வண்ணம் இருக்க,பூஜாவோ மறுக்கிறார்.
தெலுங்குப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
“ஏம்மா நீங்கள் காதல் கூண்டில் சிக்கிக் கொண்டு விட்டீர்களாமே? நிஜமா?”
கேட்டதும் கொதித்துவிட்டார் பூஜா.
“என்ன நெனச்சுக்கிட்டு இந்த கேள்வியை கேக்குறீங்க? நான் இன்னும் சிங்கிள்தான். இந்த தெலுங்கு சினிமாவில நான் நம்பர் ஒன்னா வரணும்.அதுவரை சிங்கிள்தான்.” என பொரிந்து தள்ளி விட்டார்.