நடிகர் ரியாஸ்கான் உடல் கட்டான நடிகர். சீரியல்களிலும் நடிக்கிறார். இவரது மனைவி உமா ரியாசும் நடிகை.மகனும் நடிகர்.
இவர்களுடைய வீடு பனையூரில் இருக்கிறது.சென்னை நகரை விட்டு சற்று விலகி இருக்கிறது. இங்குதான் தளபதி விஜய்யின் பிரமாண்டமான பங்களா இருக்கிறது.
ரியாஸ்கான் வழக்கம்போல தனது காலை நேர நடைப் பயிற்சியாக சென்றபோது சிலர் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தார்களாம்.
ரியாஸ்கான் அவர்களிடம் சென்று இப்படியெல்லாம் கூட்டம் கூடி நிற்கக்கூடாது .சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள் என்று சொன்னாராம்.
அவர்களில் ஒருவருக்கும் ரியாஸ்கானுக்கும் வாக்குவாதம் நடந்து இருக்கிறது.அது கை கலப்பில் முடிந்ததாக சொல்லப்படுகிறது.
தான் தாக்கப்பட்டதாக கானாத்தூர் போலீஸ் நிலையத்தில் ரியாஸ்கான் புகார் செய்திருக்கிறார்.
எல்லாம் சரி.!
ரியாஸ்கான் செய்தது சரியா? எவரும் வீட்டை விட்டு வெளியே நடமாடக்கூடாது .அவசியமான பொருள் வாங்குவதற்கு மட்டுமே வரவேண்டும் என அரசு சொல்லியிருக்கிறபோது இவருக்கு மட்டும் காலைநேர நடைப்பயிற்சிக்கு அனுமதி கொடுத்தது யார்?