இரண்டு மாத கர்ப்பிணி அவள்.! லூதியானாவில் இருந்து கயா வந்து சேர்ந்தபோது கரு
கலைந்து விட்டது.
கணவனும் உறவுகளும் மருத்துவமனையில் சேர்த்தார்கள். குணம் பெறுவாள் என்கிற நம்பிக்கையில்.!
ஆனால் அவளின் சாவோலை அங்குதான் எழுதப்பட்டிருக்கிறது.
ரத்தப்போக்கு அதிகமாகி இருக்கிறது.
திடீரென அவளுக்கு கொரானா தொற்று இருப்பதாக சொல்லி தனி வார்டுக்கு மாற்றினார்கள். ஏப்ரல் 1 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட அவளை 4 ஆம் தேதியே குணமாகி விட்டதாக சொல்லி வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.ஆனால் 6 ஆம் தேதி ரத்தப்போக்கு அதிகமாகிவிட்டதாக அதே மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவள் இறந்து போனாள் !
எப்படி நடந்தது இந்த மரணம்?
அந்த மருத்துவ மனையில் அடுத்தடுத்து இரண்டு நாட்கள் டூட்டி டாக்டரால் அவள் கற்பழிக்கப் பட்டாள் என்பதை உறவினர்கள் சொல்லிவிட்டார்கள்.
தற்போது அந்த டாக்டர் எஸ்கேப் ! பீகார் போலீஸ் தேடிவருகிறது. இந்த செய்தி மலையாள இணைய தளத்தில் வந்தது..