ஒரு தாயின் துணிவு…
1400 கிலோ மீட்டர் தொலைவு ஒற்றை ஆளாக பயணித்து மகனை ‘மீட்டுக் கொண்டு’ வந்திருக்கிறார் ரஷியாபேகம் என்கிற பள்ளி ஆசிரியை.
மகன் முகமது நிஜாமுதீன் ஹைதராபாத்தில் இருக்கிற தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான்.தேர்வு எழுதுவதற்காக ஹைதராபாத்தில் இருந்திருக்கிறான்.நண்பருடன் தேர்வு எழுதி முடித்து விட்டு கடந்த ரெண்டு வாரமாக ரகமதாபாத்தில் தங்கிவிட்டான்.
நெல்லூர் மாவட்டம் போதான் நகரில் அம்மாவுக்கு தலைமை ஆசிரியை வேலை. இங்கிருந்து ரகமதாபாத்துக்கு 700 கிலோ மீட்டர் தூரம்.
நாடு முழுவதும் லாக்டவுன்.வாகன போக்குவரத்து எதுவும் இல்லை.மகனை எத்தனை நாள்தான் பிரிந்திருக்க முடியும்?
லோக்கல் போலீஸ் உதவி கமிஷனர் ஜெயபால் ரெட்டியிடம் ஒரு அனுமதி கடிதம் வாங்கிக்கொண்டு ஸ்கூட்டரில் பர்தா அணிந்து கொண்டு கிளம்பிவிட்டார் ரஷியாபேகம்.
வழியில் அங்கங்கே விசாரணைகள் .போலீஸ் கமிஷனரின் கடிதத்தை காட்டியபடியே பயணம் செய்திருக்கிறார்.ஏப் .6 ஆம் தேதி கிளம்பிய ரஷியா பேகம் கூகுள் மேப் உதவியுடன் ஊர் போய் சேர்ந்து விட்டார். மறுநாள் 7 மணிக்கு மகனுடன் சொந்த ஊருக்கு பயணம் .
” உறுதியும் தைரியமும் மனதில் இருந்தால் நினைத்ததை சாதிக்க முடியும்”என்கிறார் ரஷியாபேகம்.
அவர் பயணித்தது 1400 கிலோ மீட்டர்.