கடந்த 1979ஆம் ஆண்டு வெளிவந்த ‘அழியாத கோலங்கள்பாலுமகேந்திரா தமிழில் இயக்கிய முதல் திரைப்படம்இது. பெரிய வரவேற்பை பெற்ற இந்த படத்தில் பிரதாப்போத்தன், ஷோபா உள்பட பலர் நடித்திருந்தனர். தற்போது இதே பெயரில் மீண்டும் ஒரு படத்தை பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த எம்.ஆர்.பாரதி இயக்கி வருகிறார். தனது குருவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இப் படத்திற்கு ‘அழியாத கோலங்கள்’ என்ற தலைப்பை வைத்துள்ளதாகவும் மற்றபடி ‘அழியாத கோலங்கள்’ படத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார் இயக்குனர் எம்.ஆர்.பாரதி. இப்படத்தில், அர்ச்சனா, ரேவதி ஆகியோர்களுடன் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கின்றனர் ராஜேஷ் கே.நாயர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அரவிந்த் சித்தார்த்தா இசையமைக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கிறது கோலிவுட்!