தல அஜித்குமார் என பொது நிகழ்ச்சிகளை தவிர்க்கிறார்? வெளியிடங்களுக்கு ஏன் வருவதில்லை.?
மில்லியன் டாலர் கேள்வி.
இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸரான அலிஷா அப்துல்லா காரணம் சொல்கிறார்.ஒரு மணி நேரத்தில் 190 மைல்களை கடந்தவர் என்கிற சாதனையாளர். கார் ஓட்டுவதிலும் வல்லவர் ! சென்னை எம்.ஓ.பி.வைஷ்ணா,லயோலா ஆகியவை இவரது கல்விக்கூடங்கள்.
தல அஜித் ஏன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்பதற்கு காரணம் கண்டு பிடித்து சொல்லி இருக்கிறார்.
“ஒரு ரேஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தவர் நடந்து செல்லவும் முடியாமல் அவரை கூட்டம் சூழ்ந்து கொண்டது. அவரது பிரைவசியை மதிப்பதில்லை. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் அவர் பொது நிகழ்ச்சிகளை தவிர்க்க ஆரம்பித்தார் என்று நினைக்கிறேன் “என்கிறார்.