சினிமாவில் டூப் போடுவது என்பது தலைமுறை தலைமுறையாக இருந்து வருவதுதான்.!
கேப்டன் விஜயகாந்துக்காக அவரைப் போலவே ஒரு டூப் இருந்தார்.வாகினி ஸ்டுடியோவில் தான் அவரை சில பத்திரிகையாளர்கள் பார்த்து விட்டார்கள். பொதுவாக டூப் போடுகிறவர்களுக்கு பெரிய அளவில் பெயர் கிடைப்பதில்லை.சம்பளமும் அள்ளிக்கொடுக்க மாட்டார்கள்.கிள்ளித்தான் கொடுப்பார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இயக்குநர் இமயத்தின் மகன் மனோஜ்குமார் டூப் போட்டிருந்த சங்கதி தற்போதுதான் தெரிய வந்திருக்கிறது.
ஊரடங்கு சட்டத்தினால் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பவர்களுக்கு “பார்த்த ஞாபகம் இல்லியோ “என்கிற ஞான நிலை.! ஒவ்வொன்றாக ஞாபகத்துக்கு வருகிறது.
2010 -ல் வந்த எந்திரன் படத்தில் இயக்குநர் ஷங்கர் இரண்டு கேரக்டர்களை உருவாக்கியிருந்தார்.
வசீகரன் என்கிற விஞ்ஞானி. அவர் படைத்திருந்த சிட்டி என்கிற ரோபோ.
இந்த இரண்டிலும் ரஜினிதான் நடித்திருந்தார்.கிராபிக்ஸ் ,வி.எப்.எக்ஸ் ,கலக்கலில் சிட்டி கேரக்டர் வரவேற்பை அள்ளியது. இந்த இரண்டு கேரக்டர்களில் ஒன்றில் மனோஜ் கே-பாரதி நடித்திருந்ததை படங்களுடன் வெளியிட்டிருக்கிறார். வி .எப்.எக்ஸ் மகிமையினால் மனோஜ் உடம்பில் ரஜினியின் தலையை ஒட்டி கில்லாடித்தனத்தை காட்டியிருக்கிறார்கள்.
பலே வெள்ளையத்தேவா!