நாட்டில் அவனவன் அடுத்த வேலை உணவுக்கு வழி இல்லாமல் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறான் .பிழைக்கிற பொழப்பு போச்சே என்கிற கவலையில் அன்றாடங் காய்ச்சிகள். அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் விற்கிற விலைவாசியில் கரைந்து போய்விட்டது.
ஊரடங்கு மேலும் 15 நாட்கள் நீடிக்கலாம் என்கிற நிலை.கொரானா .மத்திய மாநில அரசுகள் போராடிக்கொண்டு இருக்கிற நிலையில் சிலர் நாட்டு நலனுக்கு ஊறு தேடுகிற வகையில் பதி விடுகிறார்கள்.
ஒருவனை தூஷித்தால் பதிலுக்கு அவன் கல்லெறிவானா ,சும்மா இருப்பானா?
இதோ பிஜேபி பிரமுகர் எச்.ராஜா என்பவரின் பதிவு.
“அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் கொரோனா கோர தாண்டவம் ஆடும் போது இந்தியாவில் தப்லீகி ஜமாத் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்த சில ஆயிரம் பேருக்கு மட்டுமே பாதிப்பு .எனவே இந்தியாவை காப்பாற்றி வருவது அத்திவரதர் என்று ஆன்மீக வாதிகள் கூறுகின்றனர்.ஆனால் இதெல்லாம் ஈ.வெ.ரா கூட்டத்திற்கு புரியாது”
இதற்கு பதில் சுப.வீரபாண்டியனின் படம் போட்டு பதிவு.
