“வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக்கண்டுளந்துடித்தேன்
ஈடின்மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்”என்றார் வள்ளலார் .
அத்தகைய உணர்வு இன்றைய அரசியல்வாதிகளுக்கு இருக்கிறதா? ஊழலில் திளைத்து எத்தனையோ கோடிகளை கொள்ளையடித்தவர்கள் என்ன செய்கிறார்கள்.?
தண்டனை பெற்று சிலர் , தண்டனை அடையாமல் தப்பிக்க வழி தேடி பலர் என தலைவர்களாக வாழ்கிறார்கள். கோடிகளில் சம்பாதிக்கும் பலரும் கொடுக்க மனமின்றி பொய்யாக அழுகிறார்கள்.
ஆனால் ராகவாலாரன்ஸ் ?
இவர் மனிதரில் புனிதர் என்று சொல்லலாம். இனி அவரது செய்தி பேசும்.
தனது புதிய அறிவிப்பினை ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை மாதப்பிறப்பு நாளன்று அறிவிப்பதாக 5 மணிக்கு அறிவித்து விட்டார் இரண்டாம் எம்.ஜி .ஆர்.