பிறரின் கதையை தனதாக்கிக் கொள்வதற்கும் திறமை வேண்டும்.சிலர் தனதாக்கி ‘கொல்வார்கள்’
ஆனால் ஏஆர் முருகதாஸ் மீது திறமையானவர் என்கிற மரியாதை ருக்கிறது.
ஹாலிவுட் இயக்குநர் கிரிஸ்டோபர் நோலன் என்பவர் வித்தியாசமான கதைகளை படைப்பவர் என்கிற பாராட்டுக்குரியவராக இருக்கிறார்.
இவரது ‘மெமென்டோ ‘படம்தான் தமிழில் ‘கஜினி’யாக மறு உருவம் பெற்றது என அப்போதே விமர்சனங்கள் எழுந்தன. ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் ‘என்பதுதான் நோலனின் கதைக்கரு. அதை சேதாரமில்லாமல் கஜினியில் கையாண்டிருந்தார்கள் .
சூர்யா நடித்திருந்த கஜினி வசூலை வாரிக் குவித்தது.
அதனால் அந்த படத்தை பாலிவுட் நடிகர் அமீர்கான் இந்தியில் படமாக மாற்ற முருகதாஸை மும்பைக்கு அழைத்து சென்றால். இந்தியிலும் அந்தப்படம் சக்கைப்போடு போட்டது.
இதை பற்றி ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனிடம் கேட்டார்கள்.
“நான் அந்த படங்களை பார்க்கவில்லை.பொதுவாக விமான பயணங்களின் போதுதான் பிற மொழிப்படங்களை பார்ப்பது வழக்கம். நீங்கள் சொல்கிற படங்கள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சிதான்.வாய்ப்பு கிடைக்கிறபோது அந்த படங்களை பார்க்க முடியும் “என்று நம்புவதாக சொல்லியிருக்கிறார்.
மனுஷன்யா! காப்பிரைட் உரிமை கோரி கோர்ட்டுக்கு போகிறேன் என்று சொல்லவில்லையே!
சூர்யா அமீர்கான் மாதிரி மெமென்டோ நாயகன் ஆஜானுபாகான ஆள் இல்லை. அவருக்கு நோலன் நடிப்பு சொல்லித்தருகிற படம்தான் இங்கே பிரசுரம் ஆகியிருக்கிறது.(படம் உதவி ‘சம்மர் எண்டெர்டெயிண்ட்மென்ட் ‘)