அ சூர்யா, தற்போது சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான ‘எஸ்-3’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வ ருகிறார்.மேலும், இதில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை ராதிகாசரத்குமார் நடித்து வ ருகிறார். விசாகப்பட்டினத்தில் கடந்த இரண்டு நாட்களாக சூர்யா,ராதிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகிறது, நடிகர் சங்கத் தேர்தலின் போது ஏற்பட்ட பிரச்சனையில் நடிகர் சிவகுமாரை, ராதிகாவும்,அவரது கணவர் சரத்குமா ரும் மிகவும் கடுமையாக தாக்கி பேசினார். இந்நிலையில் சங்கத்தின் வரவு செலவு கணக்கு இன்னும் தாக்கல் செய்யாத சரத்குமார் மீது நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர்,பொதுச்செயலாளர், பொருளாளர்சூர்யாவின் தம்பி கார்த்தி ஆகியோர் சென்னை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்க தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ள நேரத்தில், ராதிகாவுடன் சூர்யா எப்படி நடிக்க சம்மதித்தார் என கோலிவுட்டே ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் உள்ளது!