வில்லங்கமான கருத்துகளை சொன்னால் அதன்வழியாக பெரும்பான்மையான மக்களால் கவனிக்கப்படலாம் என்கிற எண்ணம் பல வி.ஐ.பி.களுக்கு இருக்கிறது.இதில் அரசியல்வாதிகளும் அடக்கம். அடுத்தவனை பற்றி நொட்டைச்சொல் சொன்னால் விரைவாக பரவி விடுகிறது.
“என்னடா அந்த வெளங்காதவன், அடுத்த வீட்டு ராசாத்தியை கையைப் பிடிச்சு இழுத்திட்டானாம்ல”என்று ஒரு பிட்டை தூக்கிப்போட்டா ,அது முழுப்பொய் என்றாலும் ஊர் முழுக்க பேசு பொருளாகிவிடும். இத்தகைய புகழாண்டிகள் திரை உலகத்திலும் இருக்கிறார்கள். உதாரணமாக ராம் கோபால் வர்மா என்கிற இயக்குநர் அந்த டைப்புதான்.
விவகாரமான கருத்துகளை சொல்வதில் இவரை வில்லங்க மன்னன் என்று சொல்லலாம்.
ஸ்ரீதேவியின் கல்லறைக்குப் பக்கத்தில் தன்னைப் புதைக்க வேண்டும் என்று சொன்னவர்தான் ஆர்.ஜி.வி.!
இன்னொருவரின் மனைவியின் கல்லறைக்குப் பக்கத்தில் உரிமை கேட்கிறோமே ,இது அநாகரீகமல்லவா என்கிற உணர்வு இல்லை என்கிறபோது என்ன மனிதர் என கேட்கத் தூண்டுகிறதல்லவா ! இப்படி தூண்டுகிறவர்தான் ராம் கோபால் வர்மா.
கடந்த 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்கு ஏற்றுக என்று பிரதமர் மோடி விடுத்திருந்த கோரிக்கைக்கு இவரின் ரீ ஆக்ஷன் என்ன தெரியுமா?
இந்த ஆள் எதற்காக விளக்கு ஏற்றுகிறார் பாருங்கள்.
இப்படித்தான் இந்த வில்லங்க வர்மா எதையாவது செய்து நெட்டிசன்களின் கிண்டல் கோபத்துக்கு ஆளாகிறார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குடிகாரர்களின் வீடு தேடி சரக்கு சப்ளை செய்யப்படும் என்று சொன்னதாக ஒரு தவறான செய்தியை ஆதாரமாக வைத்துக் கொண்டு ஆந்திர,தெலங்கானா முதல்வர்களுக்கு ஒரு பணிவான கோரிக்கையை வைத்திருக்கிறார்..
“போர் அடித்துப் போயிருக்கிறார்கள்.அவனவன் தலைமுடியை பிய்த்துக்கொண்டிருக்கிறான் ,குழந்தைகளை போல அழுகிறான் ,மன நல மருத்துவமனைக்கு போகிற நிலை, வேறு வழி தெரியாமல் பொண்டாட்டியைப் போட்டு அடிக்கிறான் .இத்தகைய சரக்கு பார்ட்டிகளுக்கு மம்தாபானர்ஜியைப்போல ‘சியர்ஸ் சொல்ல வையுங்களேன்”என்கிற கோரிக்கைதான் அது.!
மம்தா பானர்ஜி எங்கே அப்படி சொன்னார் என்பது தெரியவில்லை.