நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உததரவு அமலில் உள்ளது. இப்பணியில் ஈடுபட்டு வரும் கேரளா போலீசாரை வாழ்த்தி கமல்ஹாசன் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.இக்கடிதத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கேரளா டி.ஜி.பி லோக்நாத் பெஹரா கமல்ஹாசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, “இந்தியாவின் மிகச்சசிறந்த நடிகரான கமல்ஹாசனிடமிருந்து எங்களுக்கு கிடைத்துள்ள வாழ்த்து மிகவும் பெருமையாகவும்,கவுரவமாகவும்,இருக்கிறது . இந்த கடினமான நேரத்தில் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு காவலருக்கும் உங்களின் வாழ்த்துச்செய்தி பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.கேரளா அரசு சார்பாகவும்,கேரளகாவல்துறை சார்பாகவும் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் உங்களின் இந்த கனிவான வார்த்தை நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தன்னலமற்ற இந்த சேவையை இன்னும் சிறப்பாக செய்ய பேறுதவியாய் இருக்கும்.நன்றி” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.