உலகமே கொரானாவின் கொடிய பிடியில்.!
அவரவர் துறை சார்ந்தவர்களுக்கு பிரமுகர்கள் செய்கிற உதவி என நாடு போய்க் கொண்டிருக்கிறது.
நடிகர் ராகவா லாரன்ஸ் 3 கோடி வரை உதவி செய்திருக்கிறார். திரைத்துறையை சேர்ந்தவர்கள் தொழிலாளர்கள் அமைப்பான பெப்சிக்கு அள்ளிக்கொடுத்திருக்கிறார்கள் .பணமாகவும் அரிசி மூட்டைகளாகவும் கிடைத்து வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி தனது பங்காக 50 லட்சம் வழங்கியிருக்கிறார்.
இந்த இந்நிலையில் 8 திருநங்கைகள் ஒன்று கூடி போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டுக்கு முன்பாக நின்று ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள்.இவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. இவர்களுக்கு ரஜினியின் மனைவி லதா 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்.