ராஜாராணி ,தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் அட்லீ. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வரிசையிலும் இடம் பிடித்து விட்டவர். கோடிகளில் சம்பளம் வாங்கும் அட்லீ, ஏ.பார் ஆப்பிள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ‘சங்கிலி புங்கிலி கதவ திற’ என்ற படத்தை தயாரித்து படத் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து தற்போது,இரண்டாவைத்து தயாரிப்பை அறிவித்துள்ளார்.அந்தகாரம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், கைதி படவில்லன் அர்ஜுன் தாஸ், கீரிடம் படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்த வினோத் கிஷன், ‘ராஜா ராணி’யில் நயன்தாராவின் தோழியாக நடித்த மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை சுசி சித்தார்த் இயக்க. திரு அமுதன் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இப்படத்தின் டீசரை அட்லீ வெளியிட்டுள்ளார்.அட்லீக்கு விஜய்சேதுபதி,கரண்ஜோகர்,விஜய் ஆண்டனி ,சந்தோஷ் நாராயணன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.