சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.இப் பட போஸ்டரில், ‘தாமதமான நீதியும் அநீதியே’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜேஜே ப்ரட்ரிக் இயக்கும் இந்த படத்தில் ஜோதிகா கதையின் நாயகியாக நடிக்கிறார்.ஜோதிகாவுடன் முக்கிய வேடத்தில் கே பாக்யராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன், பார்த்திபன் என 5 முன்னணி இயக்குநர், நடிகர்கள் நடிக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ள போஸ்டர்தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.ஒரு முக்கிய வழக்கு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படும் இப்படத்தின் ஒளிப்பதிவை,ராம்ஜி கவனிக்க, கோவிந்த் வசந்தா.இசையமைத்து வருகிறார்.