முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் 161ம் சட்டப்பிரிவை பயன் படுத்தி விடுவிக்க வேண்டும் என நடிகர் நடிகைகள் பேரணியாகச் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க இருப்பதாக தென்னிந்திய நடிகர்சங்க தலைவர் நாசர் இன்று மாலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்
தென்னிந்திய நடிகர்சங்க தலைவர் நாசர் கூறியதாவது,
முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் 161ம் சட்டப்பிரிவை பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம். அதனை வெறும் கடிதமாக கொடுக்காமல், முதல்வர் ஒதுக்கும் நேரத்தை வைத்து ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் பேரணியாக சென்று முதல்வரிடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம். ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் பேரணியாக திரளும் போது மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படும் என்று கூறினார்.