நயன்தாரா, காமெடி நடிகர் யோகிபாபு இணைந்து நடித்த கோலமாவு கோகிலா தமிழக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இதையடுத்து, மீண்டும் நயன்தாரா, யோகிபாபு கூட்டணியை அமைக்க ‘டகால்ட்டி’ தயாரிப்பு தரப்பு முயற்சி மேற்கொண்டுள்ளதாம்.
இந்த படத்திற்கு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கப் போவதே யோகிபாபு தான் என்கிறார்கள். இது வரை நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த யோகிபாபு இப்படத்தின் மூலம் கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குனராகவும் களத்தில் இறங்கப்போகிறார் என்கிறார்கள்.
மேலும் இதில்,யோகிபாபு கேட்கும் தேதிகளில் கால் ஷீட் கொடுத்தால் நயன்தாரா நடிப்பார் என்றும், இல்லை என்றால் அடுத்த கட்டமாக காஜல் அகர்வாலிடம் பேசப்போவதாகவும் கூறப்படுகிறது.இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.