தமிழ் ,தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரேயா சரண்.
சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் நடித்து வெளியாக இருக்கிற படம் நரகாசுரன்.
ஸ்ரேயாவுக்கும் ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரி கோசீவ் க்கும் திருமணம் நடந்து விட்டது. தற்போது கணவருடன் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் குடும்பம் நடத்தி வருகிறார். மகிழ்ச்சியான வாழ்க்கை.
திடீரென கணவருக்கு காய்ச்சல் தொடர் இருமல். கொரானாவின் அறிகுறியாக இருக்குமோ ?
அலறி அடித்துக் கொண்டு கணவனை அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார் .
கொரானா நெகட்டிவ் என்றதுதான் மகிழ்ச்சி திரும்பியது.
மருத்துவமனையில் அதிகமாக கொரானா நோயாளிகள்,இருப்பதால் வீட்டில் வைத்து சிகிச்சை எடுத்துக் கொள்வதாக சொல்லி ஆண்ட்ரியை அழைத்துக் கொண்டு வீடு திரும்பி இருக்கிறார்.
தாலி பாக்கியம் கெட்டி.!