“கொரானாவைரஸ் ஆபத்திலிருந்து தப்பித்துக்கொள்ள ,என்னை நானே தனிமைப் படுத்திக்கொள்ள பண்ணை வீட்டுக்குப் போறேன் “என்று சொல்லிவிட்டுப் போன ராப் பாடகி ,நடிகை ,கவிதாயினி ரீட்டா ஓரா.இங்கிலாந்தில் பேமஸ் .ஆள் நல்ல வாட்ட சாட்டமாக கும்முனு இருப்பார்.
ஆள் அராத்து என்பது தற்போதுதான் தெரிந்திருக்கிறது.
லண்டனில் இவருக்கு பண்ணை வீடு இருக்கிறது.
அங்கு போய் நான் தனிமையாக இருக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போன இந்த நடிகை என்ன செய்திருக்கிறார் தெரியுமா? கூடவே தன்னுடைய பிரண்ட்ஸ்களையும் அழைத்துக் கொண்டு போய் இருக்கிறார்.
சும்மாவா இருந்தார்கள்.?
பார்ட்டி. பைக்குகளை எடுத்துக் கொண்டு இரைச்சலிட்டபடியே விரட்டுவது, பக்கத்து வீட்டுக்காரர்களை இம்சை பண்ணுவது என அட்டகாசம் பண்ணியிருக்கிறார்கள். புகார் போயிருக்கிறது.இவ்வளவுக்கும் பண்ணைவீடு ரீட்டாவுக்கு சொந்தமானது இல்லையாம் .வாடகைக்கு எடுத்துக்கொண்டு ராவடித்தனம் பண்ணியிருக்கிறார்.