வாய்ப்பு இருக்கிறதா?
ஜூன் 22 ஆம் தேதி தளபதி விஜய்யின் பிறந்த நாள்.
அன்றைய நாளில் ‘மாஸ்டர்’திரைப்படத்தை வெளியிடலாம் என்று தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ நினைப்பதாக ஒரு சேதி.
மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.
கொரானா அடங்கியிருந்தால் சில பல நிபந்தனைகள் தளர்த்தப்படலாம். அடங்காமல் இருந்தால் நிர்பந்தங்கள் அதிகமாகலாம்.
இப்படி இருவகையான நிலைகள் இருக்கின்றன.
ஜூன் 22 என்பது தியேட்டர்களுக்கு சாத்தியம் தானா என்பது தெரியவில்லை. தியேட்டர்களை திறக்கலாம் என அரசு உத்திரவிட்ட பிறகே தியேட்டர் அதிபர்களின் நிலைப்பாடு என்னெவென தெரியவரும்.
சமூக இடைவெளி தியேட்டரிலும் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று அரசு அறிவிக்கலாம் என எதிர்பார்க்கிறார்கள். கொரானா தொற்றுக்குப் பயந்து கொண்டு மக்கள் தியேட்டருக்கு அதிக அளவில் வராமலும் போகலாம். உயிருக்குப் பயப்படாமல் இருக்க முடியுமா?
படம் பார்க்கிற ஆவலில் நோய்த்தொற்றை மறைத்துக்கொண்டு படம் பார்க்க வருகிறவர்களும் இருக்கலாம். தளபதி விஜய்-மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இரண்டு பிரபல நடிகர்களுக்கும் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் இருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
தளபதி விஜய்யின் படம் என்பதால் அரசு கடுமையுடன் நடந்து கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.