காய்சசல் அடித்தால் ,தொடர்ந்து இருமினால் அது கொரானா நோய்த்தொற்றுக்குக் காரணமாக இருக்கலாம். மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்து உறுதிபடுத்திக் கொள்ளுங்கள் என்றுதான் டாக்டர்கள் சொல்லிவருகிறார்கள்.
ஆனால் நொயிடாவில் இருமியதற்காக ஒருவரை துப்பாக்கியால் சுட்ட முட்டாள் ஒருவனை போலீசார் தேடிவருகிறார்கள்.
லுடோ என ஒரு விளையாட்டு. நாம் தாயம் ,ஆடு புலி ஆட்டம் ஆடுவது மாதிரி இதுவும் ஒரு விளையாட்டு. படத்தில் லுடோ விளையாட்டு சாதனங்களை பார்க்கலாம்.
தயாநகர் கிராமத்தில் இரவு 9மணியளவில் ஊர்க்கோவிலில் ஜெயவீர சிங் ,பிரசாந்த் சிங் மற்றும் சில நண்பர்கள் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். (ஊரடங்கு சட்டம் என்னவாச்சு?)
அப்போது பிரசாந்த் சிங் இருமி இருக்கிறார்.
அடுத்த நிமிடமே ஜெயவீர்சிங் ஆவேசமாகிவிட்டான்.
கொரானாவை பரப்புகிறானோ என்கிற கோபத்துடன் இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுவிட்டு ஓடிவிட்டதாக சொல்கிறார்கள்.
இதுதான் நடந்ததா அல்லது விளையாடியதில் ஏதேனும் கோல்மால் நடந்ததா என்பது தெரியவில்லை. பிரசாந்த் சிங் தற்போது ஆஸ்பத்திரியில் இருக்கிறார்.போலீசார் ஜெயவீரசிங்கை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.