தமிழ் தெலுங்கு சினிமா உலகத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட நடிகையாகி விட்டவர் ஸ்ரீ ரெட்டி .
வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் பிரபல ஹீரோயின்களுக்கு இல்லாத ரசிகர்கள் இவரது முக நூலுக்கு இருக்கிறார்கள்.
எவ்வளவுதான் ஆபாசமாக பதிவிட்டாலும் அதை பேஸ் புக் கண்டு கொள்வதில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்,எவ்வளவு செல்வாக்கான நடிகை என்பதை.!
ஹைதராபாத்தில் இருந்தபோது அவருடைய பாரில் ஜாலியாக இருந்ததை வீடியோவாக எடுத்து பதிவிட்டவர் இந்த ஸ்ரீ ரெட்டி.
தற்போது கொரானா கொள்ளைநோய் பற்றி அக்கறையாக ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
மே .3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்ததை விமர்சிக்கிற வகையில் அந்த பதிவு இருக்கிறது.
“மே 3 ஆம் தேதிக்குப் பிறகு வானத்துக்குப் போய் விடுமா கொரானா?
அதுவரை ஏழைகள் என்ன செய்வார்கள் குறைந்த பட்ச செலவுக்காகவாவது காசு பணம் கொடுங்க.?
3 ஆம் தேதிக்கு பிறகு யாராவது ஒரு ஆளுக்கு கொரானா வந்து விட்டால் மறுபடியும் லட்சக் கணக்கில் பரவாதா?” என்று கேட்டிருக்கிறார்.