நடிகை,தன்னார்வலர் கஸ்தூரி.
நாட்டு நடப்பை நாகரீகமாகவும் சற்று அதட்டியும் சொல்லுகிறவர்.இதனாலேயே சிலரின் எதிர்ப்பு. அதையும் தாங்கிக்கொண்டுதான் அவ்வப்போது தனது கருத்துகளை வெளியிட்டுவருகிறார்.
தமிழக அரசின் நடவடிக்கை ,கேரளா அரசின் நடவடிக்கை இரண்டையும் ஒப்பிட்டு சுருக்கென ஒரு கொரானா பதிவு …
“அறிக்கை விட்டு அழிக்க முடியுமா கொரோனா அரக்கனை? அண்டை மாநிலத்தில் – 100 முனைப்பு, 0 இறப்பு. 100% வெற்றி,0 விளம்பரம். அதிகம் பேசவில்லை
@vijayanpinarayiஅனைத்தும் செயலில் காட்டுகிறார். தமிழக தலைவர்கள் சுயவிளம்பரத்தை விடுத்து சுயகட்டுப்பாட்டை வளர்த்தால் மட்டுமே நமக்கு விடிவு.”என்கிறார் கஸ்தூரி
.மற்றொரு பதிவில்…
“முதல்வரே சொல்லிவிட்டார், கொரோனா பணக்கார நோய் , நம்மை தாக்காது என்று மக்கள் தவறாக எண்ணி அசட்டையாக இருந்துவிட கூடாது. நல்ல மருத்துவமனை வசதி, உயர்தர சிகிச்சை, எல்லாமே பணக்காரர்களுக்கு கிடைத்து விடும். நோயின் தீவிரம் ஏழைகளை தான் அதிகம் சோதி..”