பாலிவுட் நடிகை ரிச்சா சடா .ஊரடங்கு சட்டத்தால் முக்கியமான நிகழ்வை தள்ளிப்போட்டுவிட்டு வீட்டில் சும்மாவே உட்கார்ந்திருக்கிறார்..
பிஸியான ஒரு நடிகையை ஒரு இடத்தில் முடக்கிப்போட்டுவிட்டால் என்ன ஆகும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்த நடிகைக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்கிற துடிப்பு அதிகமாகியது.
உள்ளூரில் இருக்கிற குருத்வாராவுக்கு சென்று தினக்கூலிகளுக்கு உதவி செய்யலாம் என்று கேட்டபோது அவர்கள் தங்களுக்கு பணம் எதுவும் வேண்டாம் .உணவுப்பொருட்கள் வழங்கினால் பேருதவியாக இருக்கும் என்று சொல்லிவிட்டார்கள்..
இவரும் 20 கிலோ போதுமானதாக இருக்கலாம் என நினைத்தபோதுதான் பொறி தட்டியது. ஒரு நாளைக்கு அவர்களுக்கு 250 கிலோ வரை தேவைப்படும் என்பதை அறிய முடிந்திருக்கிறது…
மொத்தவியாபாரிகளுடன் பேசி தேவையானதை வாங்கி வழங்கி இருக்கிறார்.
“நமது மனிதாபிமானத்துக்கு கொரானா வைத்த சோதனை இது. மனிதனின் மனிதாபிமானத்தை வெளிக்கொணர வைத்திருக்கிறது”என்கிறார்.