எனது நண்பரின் மகன் . திருமணம் முடித்து பல மாதங்கள் கடந்து என்னை சந்தித்தான்.
தேனிலவுக்கு அவன் எங்கும் போகவில்லை. மனைவியை ரொம்பவும் நேசித்தான். கையில் பூ பலகாரம் இல்லாமல் வீட்டுக்கு சென்றதில்லை. அரசு ஊழியர். அஷ்டலட்சுமி, வடபழனி கபாலீஸ்வரர் என கோவில் ,குளங்களுக்கு அடிக்கடி செல்வான்.
பையன் பக்திமான். நெற்றியில் துன்னூறு குங்குமம் இல்லாமல் பார்க்க முடியாது. ஒருநாள் தொலைபேசியில் “அங்கிள் ..உங்கள்ட்ட பேசணும். ஈவ்னிங் வரவா?” அவன்தான் கேட்டான்..
“இதுக்கெதுக்கு பெர்மிஷன்? வர வேண்டியதுதானே? ஏம்பா பிரச்னை ஏதுமில்லையே?”
சந்தேகம் வருமா வராதா? மூணாவது மனிதனிடம் தனியாக பேசுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?
வந்தான்.சந்தேகம் கேட்டான். எனக்கு என்ன பதில் சொல்வது என்பது தெரியவில்லை.
“அங்கிள் ! டெய்லி ரெண்டு வாழப்பழம் சாப்பிடுறேன்?”
“ஏம்பா ..மலச்சிக்கலா ..இந்த வயசில?”
“அதெல்லாம் இல்ல அங்கிள் ! காளான் ,உருளக்கெழங்கு, கடல் சிப்பி இதெல்லாம் சாப்பிடுறேன்.!”
“ஒடம்புக்கு நல்லதுதான்.அத ஏன் எங்கிட்ட சொல்றே?”
மேலே பேசுவதற்கு தயங்கினான். இருந்தாலும் சொன்னான் வெட்கப்பட்டபடி!
“பெட்ரூமிலும் தென்மேற்கு மூலைய்லதான் ‘நாங்க படுக்கிறோம்.”
“இந்த வாஸ்து எதுக்குப்பா? பெரியவங்க அப்படி படுக்க சொன்னாங்களா?”
“இல்ல அங்கிள்.! ஒரு புத்தகத்தில படிச்சேன். இப்படியெல்லாம் சாப்பிட்டு படுத்தால் ஆண் குழந்தை பெறக்குமாம். அது உண்மையா இருக்குமான்னு ஆம்பள பிள்ள பெத்த உங்க கிட்ட கேட்டா சரியா இருக்குமேன்னுதான் கேக்கிறேன்.”
இந்த காலத்தில் இப்படிப்பட்ட ஆளும் இருக்கிறானே என்கிற ஆதங்கம்தான் வந்தது.
எங்கே படுத்தால் என்ன அது ஆணோ பெண்ணோ பிறக்கப்போகுது. ஆண் குழந்தை பிறப்பதற்கு என தனி செய்கை முறையா இருக்கிறது?
அடப்பாவிகளா?