திரௌபதி இயக்குநர் மோகன் ஜி.க்கு சில இயக்குநர்கள் மீது கோபம் இருக்கிறது. அவரது பதிவுகளில் அடிக்கடி அந்த சீற்றம் தெரிகிறது.
இவரது படத்தை சிலாகித்து யாரும் சொல்லவில்லை என்கிற கோபமா? நாடகக்காதல் என்பதை ஏற்க மறுக்கிறார்கள் என்பதால் அந்த கோபமா? தெரியவில்லை.
சில இயக்குநர்கள் தனக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்கிற ஆதங்கத்தை இன்றும் தனது டிவிட்டர் தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
யார் அவர்கள்? சொன்னால்தான் தெரியும்.!
“பல இயக்குனர்கள் பேச வேண்டிய இடத்தில் பேசி இருந்தால் விமர்சனம் என்ற பெயரில் பலர் கேவலமாக பேசி இருக்க மாட்டார்கள்.. இன்று நான் இதெல்லாம் மக்களுக்கு சொல்லாமல் போனால் இந்த பிறவிகளின் உண்மை முகம் வெளியில் தெரியாது..” என்கிறார் ஜி.மோகன்