“குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே குற்றமென்ன செய்தேன்” என்று மகன் மனோகரன் தந்தை புருசோத்தமரிடம் கேட்டதை போல சவூதி இளவரசி இன்று தந்தையிடம் நீதி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
சவூதி இளவரசி பஸ்மாஹ் பிந்த் சவுது (வயது 56 )அல் -ஹெயிர் சிறைச்சாலையில் தற்போது அடைக்கப்பட்டிருக்கிறார்.
எதற்காக ,ஏன் அடைக்கப்பட்டிருக்கிறார் என்பது அவருக்கு தெரியாது. அவர் தொழிலதிபர்.பட்டத்துக்கு உரியவர். உடல் நலக்குறைவு காரணமாக அவர் சுவிஸ் செல்லவிருந்த நேரத்தில் மன்னர் சல்மான் இளவரசியை சிறையில் அடைக்கும்படி உத்திரவு போட்டிருக்கிறார்.
குற்றப்பட்டியல் இல்லை.முகாந்திரமும் தெரியவில்லை.
தற்போது சிறையில் உயிருக்குப் போராடுவதாக டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார் இளவரசி
“நான் தற்போது சிறையில் இருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியுமல்லவா!
எனது உடல்நலம் மிகவும் கடுமையாக கெட்டிருக்கிறது.அது எனது மரணத்தில்தான் முடியும்.
எனக்கு இதுவரை எந்தவித மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படவில்லை ராயல் நீதிமன்றத்துக்கு நான் அனுப்பிய கடிதத்துக்கும் பதில் இல்லை.”என்பதாக டிவிட்டர் செய்தி தெரிவிக்கிறது.
மன்னர் சல்மான் .மற்றும் இளவரசு பட்டம் முகமது -பின்-சல்மான் ஆகியோருக்கு இளவரசி கோரிக்கை விடுத்திருக்கிறார்.
“நான் எந்த தவறும் செய்யவில்லை!” என்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.