பொன்னியின் செல்வன் முதல் கட்டப்படப்பிடிப்பு தாய்லாந்தில் ஒரு மாதம் நடந்தது. முக்கியமான சில காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டிருக்கின்றன. கார்த்திக் ,ஜெயம் ரவி , இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள்.
.இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னையிலேயே பிரம்மாண்ட அரண்மனை அரங்கம் அமைத்து உருவாக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதில் சரத்குமார் ,கார்த்தி ,விக்ரம், ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம்’ பொன்னியின் செல்வனை’ பற்றிய முக்கிய தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளார்.
தனது சமூக வலைத் தள ரசிகர்களின் உரையாடல் ஒன்றில் “பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கப் போகிறோம் . அதனால் இதன் இரண்டாம் பாகமும் தற்போது ரெடியாகி வருகிறது.ரசிகர்கள் பலர் யோசித்தது போலவே இந்த ஊரடங்கு சமயத்திலும் நான் எனது அடுத்த படத்திற்கான கதையை எழுதி வருகிறேன். பொன்னியின் செல்வனுக்கு அடுத்து அந்த படம் பற்றிய அறிவிப்புகளை வெளியிடுவேன். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் தொடரும்” என்று கூறியுள்ளார்.