கொரானா வந்தபிறகுதான் நம்முடைய நடிகர்களின் வள்ளல் குணமும் வெளிப்பட்டது.
கோலிவுட் நடிகர்கள் கிள்ளிக் கொடுக்க ,பாலிவுட் டோலிவுட்டில் அள்ளி வழங்கிவிட்டார்கள்.
அதிலும் அக்சய் குமார் உச்சம்.! 25 கோடியை தூக்கிகொடுத்து தன்னை உயரத்தில் நிறுத்திக் கொண்டார்.இவரைப் பார்த்து மற்றவர்களும் கோடிகளை பிரதமர் நிதி, முதல்வர் நிதி,கொரானா ஒழிப்பு நிதி ,மற்றும் உதவி நிதி என வழங்கி இருக்கிறார்கள்.
இப்படி அள்ளிக்கொடுக்கிறார்களே காரணம் இல்லாமல் இருக்குமா?
டோலிவுட்டில் இருக்கிற ஒரு கணக்குப்பிள்ளை ஒரு கதை சொல்கிறார்.
“பொதுவாக மார்ச் மாதம்தான் நிதியாண்டு முடிகிறது. தனிப்பட்டவர்கள் ஜூன் மாதத்துக்குள் இன்கம்டாக்ஸ் கணக்குகளை தாக்கல் செய்தாகவேண்டும். இதில் வருமானவரியாக ஒருவர் 10 கோடி கட்டவேண்டும் என்றால் அதை மொத்தமாக தூக்கி கொடுப்பானேன்? 5 கோடியை தானமாக கொடுத்துவிடு !மிச்சத்தை இன்கம்டாக்ஸ் ஆபிசில் கட்டிவிடு.இப்ப தாராளபிரபு ஆகிவிடுகிறோம்.மீடியாக்களும் மக்களும் கொண்டாடிவிடுவார்கள் “என்பதாக ஒரு கதை கட்டிவிட்டிருக்கிறார்.
என்னதான் காரணம் சொன்னாலும் கள்ளக்கணக்கு காட்டாமல் வள்ளல் ஆவதும் நல்லதுதானே,நாட்டுக்கு!