ராம்சரண் பிரபலமான தெலுங்கு நடிகர். சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் மகன்.
இவரது மனைவி உபாசனா .
வீட்டரசி.சிறப்பான சமையல் கலை டிப்ஸ் கொடுப்பார்.ஆரோக்கியமான உடல்நலக் குறிப்புகள் ,பயிற்சிகள் அதில் அடங்கும்.
அவர் குத்த வைத்து அமர்ந்திருப்பதை போல ஒரு படம் இங்கு பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
இது அவரே வெளியிட்ட ஒரு பயிற்சி பற்றிய படம்.
“இந்த மாதிரி உங்களால் ஒரு ஐந்து நிமிடம் உட்கார்ந்திருக்க முடியுமா?இந்தியன் டாய்லட்டில் இப்படி உட்கார்ந்திருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?”என்று கேட்டிருந்தார்.
படத்தில் பிழை இல்லை. ஆனால் நடிகர் ராம்சரணின் ரசிகர்களின் பார்வையில்தான் தவறு .
“இந்த படத்தையும் பதிவையும் உடனே நீக்குங்கள் “என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த படத்தில் என்ன ஆபாசம் இருக்கிறது என்பது தெரியவில்லை. அட தேவுடா!