வெகுவாக எதிர்பார்த்தார்கள் .
சூப்பர்ஸ்டார் ரஜினியும் இயக்குனர் ராஜமவுலியும் சந்தித்துப் பேசியதின் விளைவாக இன்னொரு பாகுபலியோ அல்லது ஒரு மகாபலியோ உருவாகலாம் என நம்பினார்கள். ‘டிரிபிள் ஆர் ‘படத்துக்குப் பிறகு மிகப்பிரமாண்டமான படத்தை ரஜினியின் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் வாய்ப்பு ஆந்திரத்து சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுக்கு போய்ச்சேர்ந்திருக்கிறது .
ராஜமவுலியின் அந்தப்படம் 2022-ல் தொடங்கலாம் என்கிறார்கள்.
“அப்ப சரி! எங்கள் சூப்பர் ஸ்டார் கட்சியை ஆரம்பித்து ஆட்சியையே பிடித்திருப்பார்.அது போதும்யா! வேற பிரமாண்டம் வேண்டாம்”என்கிறது ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ்.!ரஜினியின் மைண்ட் வாய்சும் இப்படித்தான் இருக்கும்.!