- “ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்றாய் தாயே போற்றி.
- அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி .
- தாயினும் பணிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி
- தளைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி..”
கொடுத்துச்சிவந்த கரங்களுடையோன் கர்ணனுக்காக கவியரசர் கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது மின்னலாய் வெட்டியது.
போதிய பாதுகாப்பு சாதனங்கள் எதுவுமின்றி கடமையில் கண்ணாக இருந்த துப்புரவாளர்களுக்கு அருகில் ஒரு வேன் போய் நிற்கிறது.
வேனில் இருந்தவர்களில் ஒருவர் அரிசி மூட்டையை எடுத்துக் கொடுக்க மற்றவர் அதை வாங்கி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு கொடுத்தார். அந்த இடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 3 பேருக்கும்3 அரிசி மூட்டைகள்..இப்படி எங்கெங்கு துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்களோ அவர்கள் அனைவர்க்கும் வேனில் சென்றவர்கள் அரிசி மூட்டைகளை கொடுத்துக்கொண்டே போனார்கள்.யார் இவர்கள்?
யார் யாரையோ பற்றி கவலைப்பட்டு கசிந்து கண்ணீர் விடுகிறவர்கள் குப்பைகளை அகற்றும் இந்த உயர் சேவையினரை பற்றி நினைத்ததுண்டா ? இவர்களைப்பற்றியும் கவலைப்படுகிற ஒரு மனிதர் இருக்கிறார் என்றால் கவியரசர் கண்ணதாசனின் வரிகள் மின்னலாய் வெட்டும்தானே!
“பொன்னும் கொடுப்பான் பொருளும் கொடுப்பான் .போதாது போதாது என்றால் இன்னும் கொடுப்பான்”என்கிற அந்த கருணைவரிகள் கர்ணனுக்கு மட்டும்பொருந்துவதல்ல , கலைப்புலி தாணுவுக்கும் சாலவும் பொருந்தும்.
இப்படி நகரின் மூன்று பெரிய வேன்களில் 250 மூட்டை அரிசிகள் அந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
திரைப்படத் தயாரிப்பாளர்களின் இன்றைய நிலை தெரியாததல்ல. வாடி வதங்கி சாய்ந்திருக்கிறார்கள். முடக்கப்பட்ட படங்கள் எப்போது உயிர்த்தெழும் என்பது தெரியவில்லை. எழுந்தாலும் பலன் கிடைக்குமா என்கிற பரிதாபம். இத்தகைய தயாரிப்பாளர்களின் இல்லம் தேடிச்சென்றன அரிசி மூட்டைகள் ..இந்த வகையில் 250 மூட்டைகள்.
பெப்சி தொழிலாளர்களுக்கு 250 மூட்டைகள்
சின்னத்திரை அமைப்பினை சேர்ந்தவர்களுக்கு 100 மூட்டைகள்.
பி.ஆர்.ஓ.சங்கக்கத்தினருக்கு 50 மூட்டைகள் ,
மீடியேட்டர்களுக்கு 30 மூட்டைகள்.
தயாரிப்பாளர் சங்கத்தின் இன்னொரு பிரிவான கில்டுக்கு 50 மூட்டைகள் .
இவைகள் நீங்கலாக வாடிய முகத்துடன் வருகிறவர்களின் குறிப்பறிந்து உதவி செய்தல்..
இப்படி நீண்டு கொண்டே போகிறது தாணுவின் பட்டியல்…
இந்த மனிதர் வெற்றிகளை சுமந்தவர்.தோல்வியையும் பார்த்தவர். எந்த நிலையிலும் உயர்ந்த உள்ளமே இவர்க்கு!
இதை பற்றி தாணு என்ன சொல்கிறார்?