அமெரிக்க அதிபர் டிரம்ப் அடிக்கடி குற்றம் சாட்டுவது இப்படித்தான் ” சீனாதான் கொரானா வைரஸை பரப்பியது என்றால் அதற்கான கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும்”
இவரது கூற்றை உறுதி செய்வதை போல நோபல் பரிசு வாங்கிய நுண்ணுயிர் கிருமி ஆய்வாளர் மன்டைனரும் சொல்லியிருக்கிறார்.
“அந்த நோய்த் தொற்றுக்கிருமி வுஹான் ஆராய்ச்சி கூடத்திலிருந்துதான் வெளியேறியிருக்க வேண்டும். மனிதர்களால் நிகழ்ந்த ‘இண்டஸ்ட்ரியல் ஆக்சிடென்ட் ‘ என்கிறார்.
ஆனால் சீன விஞ்ஞானிகள் கடுமையாக மறுத்திருக்கிறார்கள் .மிருகங்களில் இருந்து மனிதனுக்கு சென்றிருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறார்கள்,
உலகம் போகிற போக்கைப் பார்த்தால் விபரீதத்தில் முடியுமோ என்கிற பயம் வருது.