கொரானா நோய்த்தடுப்பு ஊரடங்கு காலத்தில் சில நடிகைகள் என்ன செய்கிறோம் என்பதை வீடியோவாகவும் படமாகவும் தங்களின் இணையதளங்களில் பதிவேற்றிவருகிறார்கள். ஒருவர் தலை கீழாக நின்று டீசர்ட் போட்டுக் கொண்டார். மற்றவர் பிகினியில் உடல் காட்டி அதிர வைத்தார்.இன்னொருவர் பிரா போடாமல் சமையல் செய்ததை வீடியோ பதிவிட்டு நெட்டிசன்களின் வசவுகளை வரவு வைத்துக் கொண்டார்.
இப்படி நெடுக சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் தேசிய முற்போக்குத் திராவிடர் கழக தலைவர் விஜயகாந்த் வீட்டில் என்ன நடக்கிறது என்பது தெரிய வேண்டாமா?
கேப்டனின் மனைவி பிரேமலதா ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் கணவனுக்கு ஷேவிங் செய்கிறார். தலைக்கு சாயம் பூசி விடுகிறார். நகம் வெட்டுகிறார். கால்களுக்கு கிரீம் தடவி நீவி விடுகிறார். தலைக்கு டை அடித்து விடுகிறபோது வெள்ளைத் துணியை போர்த்தியது பிரேமலதாவின் தன்னம்பிக்கையை குறிப்பதாக இருந்தது. கருப்பு சாயம் துண்டின் மீது படாமல் அடிப்பதற்கு திறமை வேண்டும்
காலில் கிரீம் தடவுகிறபோது காலில் இருந்த தழும்புகளை சுட்டிக்காட்டி “வீரத் தழும்புகள்”என்கிறார் பிரேமலதா.
படப்பிடிப்பின்போது கேப்டனுக்கு அடிக்கடி காயம் ஏற்படும் சண்டைக்காட்சிகளில் அவ்வளவு முரட்டுத்தனம் இருக்கும்.மனைவிக்கு பெருமைதான்.
இவ்வளவுக்கும் பொறுமையாக இருந்து கடைசியாக கேப்டன் புன்னகைப்பார் பாருங்கள்.
அம்புட்டு அழகு ராசா!
கொரானா வைரஸ் ஊரடங்கு காலத்தில், நான் எனது இல்லத்தில்…! #CORONA | #COVID19 | #lockdown | #Stayhome | #Staysafe pic.twitter.com/y1KGHQgaEK
— Vijayakant (@iVijayakant) April 19, 2020