தானம் கொடுப்பதற்கும் மனசு வேண்டும் ராசா..
இருக்கிறவர்கள் அள்ளிக்கொடுக்கிறார்கள்.
கட்டுக் கட்டாக வைத்திருந்தாலும் அதில் ஒற்றை நோட்டை உருவுவதற்கு ஓராயிரம் தடவை யோசிப்பவர்களும் இருக்கிறார்கள் .வரவு வைப்பதில் காட்டுகிற கடுமை கொடுக்கிறபோதும் மாறவில்லை என்றால் அதுதான் அவர்களது இயல்பு.
தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலின் ஊரடங்கு உதவி நிதியாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் இரண்டரை லட்சம் வழங்கி இருக்கிறார்.இரண்டு வழக்குரைஞர்கள் தலா பத்து ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் இரண்டே இரண்டு பேர் ஊர் உலகம் பேசும்படியாக ஆளுக்கு ஒத்தை ரூபா வழங்கியிருக்கிறார்கள் .
கால் காசு என்றாலும் உதவிதானே! அவர்களுக்கும் பார் கவுன்சில் பாராட்டு சான்றிதழ் வழங்கி இருக்கிறது.