“உங்களுக்கு நட்புக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம் என்பது தெரியாதா ?” என்று பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்திருக்கிறார் பாலிவுட் அழகி திஷா பதானி .
பிரபல நடிகர் டைகர் ஷெராப் -திஷா பதானி இருவரும் சேர்ந்து வாழ்கிறார்கள். அதாவது லிவ் -இன் -ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள் என்பதாக செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இரண்டு பேரை ஒன்றாக பல இடங்களில் ,ரெஸ்ட்டாரண்ட்களில் பார்த்தால் வேறெப்படி எழுத முடியும்? காதல் இல்லாமல் அப்படி ஒன்றாக சுற்ற முடியுமா? அப்படி சுற்றியவர்களில் பலர் பின்னாட்களில் தம்பதியராக மாறிய கதையெல்லாம் நடந்திருக்கிறதே.!
அதையெல்லாம் பார்த்த அனுபவம் அவர்களை அப்படி எழுத வைத்திருக்கலாம்.
சரி இதற்கு திஷா பதானியின் ரி-ஆக்சன் என்ன ?
“நான் இன்னமும் சிங்கிள்தான்.!டைகர் ஷெராப் என்னுடைய நல்ல நண்பர். நட்புக்கும் காதலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது என்பது தெரியாதா?” என அங்கலாய்க்கிறார் .