கண்ணுக்குக் கண்ணாக படத்தை இயக்கியவர். பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் இயக்குனர், நடிகர் ஜி.மாரிமுத்து. இசைஞானி குறித்த முக்கிய தகவல் ஒன்றை தன முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளதோடு இளையராஜா,கவிஞர் பொன்னடியான் குறித்த ஒரு சர்சையையும் தொடங்கி வைத்துள்ளார். அவர் முகநூல் பக்கத்தில் பகிர்ந்தது இது தான்!……. முகநூல் நட்புகளுடன் ஒரு இனிமையான பகிர்வு… “அரண்மனை கிளி” – நான் உதவி இயக்குநராய் (clap asst) வேலை பார்த்த முதல் படம்…(வருடம் 1992)… அந்தப் படத்தின் பாடல்கள் நீங்கள் அறிந்ததே… அதில் அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி சார் எழுத… ஒரே ஒரு பாடல் மட்டும் வேறொரு கவிஞருக்குக் கொடுக்கப் பட்டது…(பெயர் வேண்டாம்)… அந்தப் பாடல் “என் தாயெனும் கோயிலைக் காக்க மறந்திட்ட பாவியடி கிளியே…” அந்தக் கவிஞர் எவ்வளவோ எழுதியும் யாரும் திருப்தி அடையவில்லை…
சற்று கோபமடைந்த இசைஞானி விறுவிறுவென்று தன் Composing roomக்குப் போய் அரை மணி நேரத்தில் பாடலை எழுதிக் கொண்டு வந்து… அடுத்த அரை மணி நேரத்தில் பாடி விட்டுப் போய் விட்டார்… இதைப் பக்கத்தில் இருந்து பார்த்து பிரமித்து விட்டேன்… அவர் பாடி முடித்துப் போன பின் நான் மெதுவாக Voice roomக்குள் போனேன்… ஆஹா… அங்கே அந்தப் பொக்கிஷத்தைப் பார்த்தேன்… இசைஞானி தன் letter padல் தன் கையெழுத்தில் தானே எழுதிய பாடல் தாள் (lyric sheet) மைக் முன்னால் போர்டியம் standல் இருந்தது… நான் நைஸாக அதைத் திருடிக் கொண்டு வந்து விட்டேன்… இன்று வரை அதைப் பாதுகாத்து வருகிறேன்…அதைத்தான் போட்டோ எடுத்து இணைத்துள்ளேன்…
என் school…college mark sheet போல் இதையும் பத்திரமாக வைத்துள்ளேன்… தன் இசைப் பயணத்தில் 1000 படங்களைக் கடந்திருக்கும் இசை அதிசயமே… இவ்வளவு காலத்துக்குப் பிறகு என் மீது திருட்டு வழக்குத் தொடர மாட்டீர்கள் என்ற நம்பிக்கையிலும்… என்னை ஆள் வைத்துத் தேட மாட்டீர்கள் என்ற தைரியத்திலும்… இதை இங்கே பகிர்ந்திருக்கிறேன்… ஹா…ஹா…ஹா…