இயக்குநர் கஸ்தூரிராஜாவின் இரண்டு மகன்களில் ஒருவர் செல்வராகவன்.இயக்குநர் .மற்றவர் தனுஷ் .நடிகர் ,தயாரிப்பாளர்
காதல் கொண்டேன்,7ஜி.ரெயின்போ காலனி, என்.ஜிகே மற்றும் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என சர்ச்சைக்குரிய சில படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக இருக்கிறார் செல்வராகவன்.
இந்த ஊரடங்கு நேரத்தை செல்வா எப்படி செலவிட்டு வருகிறார்.?
செல்வராகவனின் காதல் மனைவி,கீதாஞ்சலி ரொமான்டிக் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார் .அதில் செல்வராகவனுக்கு, கண்களில் காதல் பொங்க ஒரு ரொமான்டிக் ‘லுக்’ குடன் அன்பு முத்தம் ஒன்றை பரிசாக தருகிறார்.
அதில்,” குவாரன்டைன் தருணத்தை உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக செலவிடுங்கள்” என்றும் பதிவிட்டுள்ளார்.
பொதுவாக இது போன்ற பதிவுகளில் ஆர்வம் காட்டாதவர் செல்வராகவன் .ஆனால் இவரது மனைவி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
செல்வராகவன் தற்போது தனுசுடன் மீண்டும் புதுப்பேட்டை-2 படத்துக்காக இணைந்திருக் கிறார். இப்படத்துக்காக தற்போது ஸ்கிரிப்ட் வேலைகளிலும் ஈடு பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.